மதுரை செல்லூர் பெரியார் தெரு அருகே வசித்து வருபவர் வாசுதேவன் (வயது 62) இவருக்கு ராமன், லட்சுமணன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் லட்சுமணன் ( 28)என்பவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி எந்த வேலைக்கும் செல்லாமல் தினமும் மதுபோதையில் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவும் மது போதையில் மீண்டும் தகராறு முற்றியுள்ளது. இதனையடுத்து மகன் லட்சுமணனை வீட்டு மொட்டை மாடியில் வைத்து தந்தை வாசுதேவன் கிரைண்டர் கல்லை தலையில் போட்டு கொலை செய்து விட்டு செல்லூர் போலீஸ் ஸ்டேசனில் சரண் அடைந்தார்.