நடிகை கஸ்தூரியை கண்டித்து தெலுங்கு பேசும் மக்கள் போராடி வருகிறார்கள். நடிகை மன்னிப்பு கேட்டாலும் அதை ஏற்கமாட்டோம். அவரை சிறையில் அடைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் கரூரில் உழைக்கும் மக்கள் விடுதலைக் கட்சியின் சார்பில் நடிகை கஸ்தூரியை கண்டித்து உழைக்கும் மக்கள் விடுதலை கழகத்தின் நிறுவன தலைவர் தேக்கமலை செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
நடிகை கஸ்தூரி தமிழக மக்களின் இடையே பிளவு ஏற்படுத்தும் வகையில் தெலுங்கு பேசும் தமிழ் மக்களை அவதூறாக ,வேண்டும் என்றே அவமான படுத்தும் வகையில் பேசி உள்ளத
தை உழைக்கும் மக்கள் விடுதலை கழம் வன்மையாக கண்டிக்கிறது..தான் பேசியதற்கு தற்பொழுது கஸ்தூரி மன்னிப்பு கேட்டிருந்தாலும் கூட,தமிழகத்தில் உள்ள தெலுங்கு பேசும் தமிழ் மக்களின் உள்ளங்கள் கொதித்து போய் உள்ளன.தமிழக முதல்வர் இதில் தலையிட்டு நடிகை கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும். மேலும் வரும் நவம்பர் 11ம் தேதி கரூர் தபால் நிலையம் முன்பு நடிகை கஸ்தூரியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் .
இவ்வாறு அவர் கூறினார்.