நன்றி: அரசியல் அடையாளம்..
சுப்புனிகாப்பிக்கடை….
‘இப்டி ரோட்டுல படுத்து இருக்குற மாடுகளை பிடிக்க மாட்டாங்களா?’ என்றபடி சுப்புனி காப்பிக்கடை பெஞ்ச்சில் வந்து அமர்ந்தார் ஸ்ரீரங்கம் பார்த்தசாரதி… அவரது குரல் கேட்டவுடன் பெஞ்சில் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்த பொன்மலை சகாயம் திரும்பி பார்க்க, அருகில் இருந்த சந்துக்கடை காஜாபாய் ‘ சாமி வந்ததும் வராததுமா கம்ப்ளைண்ட் பண்றியா? எனக்கூற அனைவரும் சிரித்தனர். ‘திருச்சியில இருக்குற 2 அதிகாரிங்கள பத்தி மேலிடத்துக்கு கம்ப்ளைண்ட் போயிருக்காம்’ என பொன்மலை சகாயம் ஆரம்பிக்க.. ‘அப்படியா யார் எந்த 2 பேர்? ’ என ஸ்ரீரங்கம் பார்த்தா ஆச்சர்யமா கேட்டார். ‘ஆமாபா நானும் கேள்விப்பட்டேன். கவர்மெண்ட் சார்புல நடக்குற எக்சிபிசன்ல முழுசா கடைகள் போடல. இது சம்மந்தமா ஆய்வுக்கு வந்த அதிகாரி ஒருத்தர் சம்மந்தப்பட்ட அதிகாரிய ஒரு புடிபுடிடிச்சாராம். 20 கடைகள போட இடம் இருக்கு. ஆனா நீங்க ஏன் போடலனு? டோஸ் உட்டு இருக்கார். திருச்சி அதிகாரி அது இதுனு விளக்கம் சொல்ல.. மிஸ்டர் அதெல்லாம் வேணாம் எல்லாத்தையும் ரிட்டனா கொடுங்கனு சொல்லிட்டு கிளம்பிட்டாராம். பாவம் திருச்சி அதிகாரி கர்.. புர்னு புலம்புறாராம்’ என காஜா பாய் சொல்லி முடிக்க.. ‘ அதே மாதிரி பாய், திருச்சி மாநகர போலீஸ்ல ஆயுதப்படைய கவனிக்குற கூடுதல் அதிகாரி ஒருவர் பச்சை பச்சையா பேசறதா லேடி போலீஸ்காரங்க புலம்புறாங்க. டெய்லியும் காலையில நடக்குற ரோல்கால்ல எங்கள வச்சுகிட்டு பச்சை பச்சையா பேசறார்.. பெண் போலீச கூப்பிட்டு பச்சை பச்சையா கேள்விகேக்குறார்.. இதே மாதிரி அவர் பேசிகிட்டு இருந்தா… தற்கொலையில தான் முடியும்னு வருத்தப்படுறாங்க.. இது சம்மந்தமா ஐஎஸ்க்கும், எஸ்பிசிஐடிக்கும் தெரியுமாம்.. தெரிஞ்சும் பெரிய அதிகாரினு அவங்க யாரும் கண்டுக்கலனு லேடி போலீஸ்காரங்க வருத்தப்படுறாங்க.. . என பொன்மலை சகாயம் சொல்லி முடிக்க..‘ சரிபா மழ வர்ற மாதிரி இருக்கு கிளம்புவோமா? என ஸ்ரீரங்கம் பார்த்தா கேட்க.. சுப்புனி காப்பிக்கடை பெஞ்ச் காலியானது…