திருச்சி இ எஸ் ஐ மருத்துவமனை வளாகத்தில் தீரன் நகர் பகுதியை சேர்ந்த டாக்டர் முத்து கார்த்திகேயன். இவர்
கார் பார்க்கிங் செய்யும் போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியது. பின்னர் ஆஸ்பத்திரிக்கு சென்ற டாக்டரை விரட்டி சென்று ஒரு கும்பல் தாக்கியது.
இஎஸ்ஐ அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவராக பணியாற்றி வரும் டாக்டர் முத்து கார்த்திகேயனை 10க்கும் மேற்பட்ட கும்பல் மருத்துவமனை வளாகத்தில் புகுந்து சரமாரியாக தாக்கியதில் மருத்துவர் காது கிழிந்து, உடல்முழுதும் காயங்கள் ஏற்பட்ட நிலையில் தற்போது அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார். டாக்டரை தாக்கிய கும்பல் திருச்சி கருமண்டபத்தைச் சேர்ந்தவர்கள்
என்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மருத்துவர் முத்து கார்த்திகேயன் காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளார். கும்பலாக தாக்குதல் நெஞ்சில் ஏறி மிதித்து உதைத்து தாக்குதல் நடத்தியதால் எலும்பு முறிவு
ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பதற்கு எம் ஆர் ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனை வளாகத்திற்குள் புகுந்து டாக்டரை 6 பேர் கொண்ட கும்பல் கடுமையாக தாக்கியுள்ளது. இதனை கண்டிப்பதாகவும் உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. போலீசார் நடவடிக்கைக்கு பிறகு டாக்டர்களின் போராட்டம் குறித்த அறிவிப்பு தெரிவிக்கப்படும் என அரசு டாக்டர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்க மாநில பொருளாளர் அருளீஸ்வரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.