பொள்ளாச்சி வால்பாறை சாலையில் தனியார் பேருந்து மோதி முதல் நிலை காவலர் மனைவி பலத்த காயம்,கோட்டூர் காவல் நிலைய போலீசார் விபத்து குறித்து விசாரணை. பொள்ளாச்சி – நவ- 5
கோவை, பொள்ளாச்சி வால்பாறை சாலையில் தினசரி அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகள்,வால்பாறை செல்லும் பேருந்துகள் ஏராளமான இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்கின்றன. இதில் குறிப்பாக தனியார் கம்பெனிகளுக்கு செல்லும் நபர்கள் அதிகம் பேர் கிராம பகுதிகளிலிருந்து இருசக்கர வாகனத்தில் பொள்ளாச்சி வந்து செல்கின்றனர்,இதை அடுத்து பொள்ளாச்சி அருகே உள்ள சமச்சீர் பகுதியில் ஆழியார் செல்லும் முருகன் தனியார் பேருந்து பொள்ளாச்சியில் இருந்து சமத்துர் பகுதிக்கு வரும் பொழுது இரு சக்கர வாகனத்தில் வந்த சக்தி நகரைச் சேர்ந்த சத்யா தனது யமஹ கம்பெனி இருசக்கர வாகனத்தில் வந்த பொழுது எதிர்பாராத விதமாக தனியார் பஸ் மோதியதில் சத்யாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது இதை அடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து தற்போது கோவை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் ஜெகநாதன் மற்றும் ஓட்டுநர் நடத்துனர் மணிகண்டன் மீது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . காயம் பற்ற சத்தியா கோட்டூர் காவல் நிலையம் பணிபுரியும் முதல் நிலை காவலர் பார்த்திபன் என்பவரது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த விபத்து குறித்து கோட்டூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.