கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன்(37). இவர் சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் கொத்தனார் வேலைக்காக சென்றார். அங்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு 10 தினங்களுக்கு முன் இறந்து விட்டார். இவரது குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டது.
இது குறித்து தமுமுக நிர்வாகிகளிடம் ஐயப்பன் குடும்பத்தினர் தெரிவித்தனர். அந்த குடும்பத்தின் கோரிக்கையை ஏற்று, ரியாத் தமுமுக மண்டல நிர்வாகிகள் நூர் மற்றும் ஜாகிர் ஆகியோர் உதவியால் ரியாத்தில் இருந்து ஐயப்பன் உடலை பெற்று திருச்சிக்கு விமானத்தில் அனுப்பி வைத்தனர்.
திருச்சி கிழக்கு மாவட்ட தமுமுக,மமக தலைவர் M.A.முகமது ராஜா அறிவுறுத்தலின்படிமாவட்ட துணைத் தலைவர் மு.சையது முஸ்தபா தலைமையில் மாவட்ட துணை செயலாளர் ரம்ஜான் அலி,மாவட்ட இளைஞரணி முஜிபுர் ரஹ்மான், சுற்றுச்சூழல் அணி மாவட்ட செயலாளர் முகமது ரபிக், விளையாட்டு அணி மாவட்ட செயலாளர் இப்ராஹிம், சமஸ்கிரான் கிளை செயலாளர் ரம்ஜான், ஆகியோர் திருச்சி விமான நிலையத்திலிருந்து ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து உடலை பெற்றுக் கொண்டு, குடும்பத்தாரிடம் ஒப்படைத்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.