ஒலிம்பிக் விளையாட்டு போட்டி 4வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இந்த போட்டியை நடத்த பல ஆயிரம் கோடி செலவாகும் என்பதால், பொருளாதாரத்தில் உயர்ந்த நாடுகள் தான் இந்தபோட்டியை நடத்தி வந்திருக்கிறது. தற்போது இந்தியா பொருளாதாரத்தில் முன்னேறி வருவதால், வரும் 2036ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த மத்திய அரசு விருப்பம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு தங்கள் விருப்பத்தை தெரிவித்து கடிதம் எழுதி உள்ளது.