திருச்சி எட்டரை,அரசு மேல்நிலைப்பள்ளியில் வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் ஐந்து விளையாட்டு வீரர், வீராங்கனைகள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். பெண்கள் , ஆண்கள் பிரிவினர் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற உள்ள மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கின்றனர். இவர்களுக்கு பாராட்டு விழா எட்டரை அரசுப்பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியை, உடற்கல்வித்துறையினர்,ஆசிரியர்கள், பெற்றோர்கள் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீரங்கம் தடகள சங்கத்தின் நிர்வாகிகள் முன்னிலையில் பாராட்டு விழா இன்று நடைபெற்றது. 19 வயது உட்பட்டுருக்கான தடகளப் போட்டியில் ஆண்கள் பிரிவில் லோகேஷ் என்பவர் 800 மீட்டர்,1500 மீட்டர் மற்றும் 3000 மீட்டர் ஓட்ட போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று முதலிடம் பிடித்தார். மேலும் 19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் ஜெஜிதா 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்ட போட்டியில் வெண்கல பதக்கம் பெற்று 3ம் இடம் பிடித்தார். பெண்கள் பிரிவில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் சஞ்சனா என்பவர் 400 & 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று முதலிடம் பிடித்தார். மேலும் ஹரிஷ்மா, சஞ்சனா,மகேஸ்வரி மற்றும் கீர்த்தனா ஆகியோர் 4×400 தொடர் அஞ்சல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுமுதலிடம் பிடித்தனர். இவர்கள் ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் கலந்து கொள்கின்றனர்