தீபாவளி பண்டிகையை முடித்து மக்கள் தங்களது ஊர்களுக்கு சென்றதையொட்டி, தஞ்சாவூரிலிருந்து புறப்பட்ட ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என தஞ்சாவூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (பொ) ஆனந்த் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். இதில், கூடுதல் கட்டணம் வசூலித்தல், நடைச்சீட்டு பக்கவாட்டு விவரங்கள், இருக்கை பட்டை, முதலுதவிப் பெட்டி, வாகன ஆவணங்கள் இல்லாதது என 21 ஆம்னி பேருந்துகளுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டன. மேலும், இப்பேருந்துகளுக்கு ரூ. 47 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டது.