ஈரோடு மாவட்டம், தாளப்பாடி அருகே உள்ள கும்டாபுரம் மலைகிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பீரேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த தீபாவளி முடிந்த 3வது நாளில் கொண்டாடப்படும் திருவிழாவில் பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் மாட்டு சாணத்தை பூசிக்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இதற்கென சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கால் நடைகளின் சாணம் கோவிலின் பின்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தது. பின்னர் கோவிலுக்கு அருகே உள்ள குளத்திற்கு பீரேஸ்வரர் சாமியை ஒருத்தலமாக எடுத்து சென்ற பக்தர்கள் நீராட செய்தனர். அதன் பின்னர் கழுதை மேல் வைத்து கோயிலுக்கு எடுத்து சென்று சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.