Skip to content
Home » திருச்சி…….பிளஸ் 2 மாணவி தூக்கு போட்டு தற்கொலை

திருச்சி…….பிளஸ் 2 மாணவி தூக்கு போட்டு தற்கொலை

திருச்சி பிராட்டியூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமசாமி இவரது மகள் மஞ்சுளா தேவி (வயது 17) இவர் திருச்சியில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். மஞ்சுளா தேவியின் தந்தை ராமசாமி அடிக்கடி குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்வாராம்.
நேற்று காலை ராமசாமி குடித்துவிட்டு  வந்து தனது மகள் மஞ்சுளாதேவியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது
.இதனால் மனவிரக்தியில் இருந்த மஞ்சுளா தேவி நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அறையில் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் மஞ்சுளா தேவியை மீட்டு உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்,   மாணவி  மஞ்சுளா தேவி ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து செசன்ஸ் கோர்ட் போலீசார் திருச்சி அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று மஞ்சுளா தேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!