நடிகர் விஜய் கட்சியின் முதல் அரசியல் மாநாடு அக்டோபர் 27-ம் தேதி நடைபெற்றது. இதில் விஜய் தனது பேச்சில் கொள்கைகள், அரசியல் எதிரிகள் என பல விஷயங்களைக் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள் விஜய்யை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
குறிப்பாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் விஜய்யின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்தார். இதற்கு விஜய் தரப்பில் இருந்து எந்தவொரு எதிர்வினையும் வெளியாகவில்லை. இதனிடையே, விஜய் கட்சியின் சார்பில் புதிதாக தொலைக்காட்சி சேனல் ஒன்று தொடங்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. அதில் தவெக செய்திகள், செயல்கள் என அனைத்தையும் ஒளிபரப்ப உள்ளார்கள்.
தமிழகத்தில் உள்ள கட்சிகளுக்கு தனியாக தொலைக்காட்சி சேனல்கள் இருக்கின்றன. அதேபோல் விஜய்யும் தொடங்க முடிவு செய்துள்ளார் எனத் தெரிகிறது. இப்போதைக்கு ‘தமிழ் ஒளி’ என்று தனது சேனலுக்கு பெயர் சூட்ட முடிவு செய்தளளதாக தெரிகிறது. இதே பெயரில் சேனல் உருவாகுமா அல்லது வேறு பெயரில் தொடங்குவார்களா என்பது விரைவில் தெரியவரும். புதிய சேனல் பொங்கல் தினத்தில் அல்லது சித்திரை 1ல் தொடங்குவது குறித்து ஆலோசித்து வருகிறார்கள்.