திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் அடுத்த சமயபுரம் சுங்கச்சாவடி அருகே உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்வதாக சமயபுரம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சென்று லால்குடி டிஎஸ்பி தினேஷ் குமார் உத்தரவின் பேரில் சமயபுரம் ஆய்வாளர் தசரதன் மற்றும் உதவி ஆய்வாளர் கவிதா ஆகியோர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர் இப்போது சந்தேகத்திற்கு இடமான ஒரு நபர் இருந்ததை கண்டு அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் லால்குடி அருகே தாளக்குடி முத்தமிழ் நகர் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் முருகானந்தம் 24 என்பதும் அப்பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது . தொடர்ந்து முருகானந்தம் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர் .