‘ஸ்டார்ட் அப் இந்தியா’ திட்டத்தின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வர்த்தக சந்தைகளில் ஊக்குவிக்கப்படுகின்றன. அவர்களுக்கு நல்ல வருமானம் கிடைத்துவருகிறது. அதன்படி, திருப்பூரை சேர்ந்த சொக்கலிங்கம் என்கிற மின்னலாடை உற்பத்தியாளர் வெப்பநிலை மாற்றத்தை வெளிப்படுத்தும் டி-சர்ட் அறிமுகம் செய்து உள்ளார். இதற்காக, செம்பருத்தி பூ, வெங்காய சருகு உள்ளிட்ட இயற்கையான பொருட்களை கொண்டு, புதிய ‘இங்க்’ தயாரித்து உள்ளார். அதைக்கொண்டு, ‘பிரின்ட்’ செய்து, வெப்பநிலை மாற்றத்தை கண்டறியும் இந்த ‘டி-சர்ட்’ வடிவமைக்கப்பட்டுள்ளது. உடல் வெப்பநிலை, 99 டிகிரி பாரன்ஹீட்டை அடையும் போது, ‘டி-சர்ட்’டில் உள்ள பிரின்டிங் வண்ணம் மாற்றம் அடைகிறது. வெப்பநிலை குறைந்த பின், மீண்டும் பழைய வண்ணத்துக்கு மாறிவிடுகிறது. குழந்தைகள், முதியவர்கள் என, அனைவரும் அணியும் போது, காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவதையும், குறைவதையும் கண்டறிய முடியும் என்று கூறும் சொக்கலிங்கம் மேலும் கூறுகையில் முதன்முறையாக, ‘பிங்க்’ மற்றும் நீல நிறத்தில் இங்க் தயாரித்து பரிசோதித்து பார்த்துள்ளோம். மதுரையில், செப்., 28, 29ம் தேதியில் நடந்த, ‘ஸ்டார்ட் அப் இந்தியா’ கண்காட்சியில் பங்கேற்றோம். பின்லாந்தில் நடக்க உள்ள கண்காட்சியில் பங்கேற்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பல வண்ணங்களில் இத்தகைய இங்க் தயாரிக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளோம். கொசுவை விரட்டும் மூலிகையினை இந்த இங்க் உடன் சேர்க்கப்படுவதால் இந்த ‘டி-சர்ட்’ அணிந்தால் கொசுக்கடியில் இருந்தும் தப்பலாம் என்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.