கடந்த அக்டோபர் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தவெக மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்ற தவெக திருச்சி மாவட்ட இளைஞரணி தலைவரும் வழக்கறிஞருமான சீனிவாசன் உள்ளிட்ட 2 பேர் விபத்தில் இறந்தனர். இதனையொட்டி திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் நவல்பட்டு சமத்துவபுரம் பகுதியில் பேனர் ஒன்று வைககப்பட்டது. நேற்று மாலை நவல்பட்டு போலீசார் அந்த பேனரை அகற்றுமாறு கூறி அந்த இடத்திற்கு வந்துள்ளனர். அப்போது பேனர் வைத்த இளைஞர்கள் அப்பகுதியில் உள்ள பேனர்கள் அனைத்தையும் எடுங்கள் நாங்களும் எடுக்கிறோம் என கூறியுள்ளனர். இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு
வந்த அக்னி தொண்டு நிறுவனத்தை சேர்ந்த மகேந்திரன் இது தொடர்பாக அவசர எண் 100க்கு போன் செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் திரும்பி சென்றுள்ளனர். மேலும் இது தொடரபாக நேரில் வருமாறு நவல்பட்டு இன்ஸ்பெக்டர் நிக்சன் கூறியதன் அடிப்படையில் அப்பகுதி இளைஞர்கள் மற்றும் அக்னி சிறகுகள் அமைப்பின் தலைவர் மகேந்திரன் உள்ளிட்டோர் நவல்பட்டு போலீஸ் ஸ்டேஷன் சென்றுள்ளனர். அப்போது இன்ஸ்பெக்டர் நிக்சன் ஒருவரை மட்டுமே தனது அறைக்குள் வருமாறு கூறியுள்ளார். அப்போது அக்னி மகேந்திரன் இன்ஸ்பெக்டரை சந்திக்க உள்ளே சென்றுள்ளார் .அப்போது 100 எண்ணுக்கு போன் செய்தது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இன்று திருச்சி எஸ்பியிடம் புகார் அளிக்க மகேந்திரன் மற்றும் சில இளைஞர்கள் எஸ்பி அலுவலகம் வந்தனர். அவர்கள் வந்த தகவல் கிடைத்ததும் எஸ்பி அலுவலகம் வந்த நவல்பட்டு இன்ஸ்பெக்டர் நிக்சன் குண்டுகட்டாக அக்னி மகேந்திரனை வலுகட்டமாக ஜீப்பில் ஏற்றி ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். திருச்சி எஸ்பி அலுவலகத்தில் நடந்த மல்லுக்கட்டு சம்பவம் தொடர்பானவீடியோ வைரலாகியுள்ளது.