திருச்சி மத்திய, மாவட்ட திமுக செயலாளர் க.வைரமணி, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ந.தியாகராஜன் எம்எல்ஏ ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது…
1.01.2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியன்று 18 வயது பூர்த்தியடையக்கூடிய புதிய வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி ஏற்படும் நாளாக கொண்டு இந்திய தேர்தல் ஆணையம் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. மேலும், வாக்காளர்களை சேர்பதற்கும், நீக்குவதற்கும், திருத்தம் செய்திடவும் சிறப்பு முகாம்கள் 16.11.2024, 17.11.2024 சனி, ஞாயிறு மற்றும் 23.11.2024, 24.11.2024 சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் அனைத்து வாக்குசாவடி மையங்களிளும் நடைபெற இருக்கிறது. இந்த பணிகளில் மாவட்ட, மாநகர, அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக, கிளைகழக நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள், செயல்வீரர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பாக பணியாற்றிட வேண்டுகிறோம். இந்தபணிகளில் வாக்குசாவடி நிலைய முகவர்கள் வாக்குசாவடி அளவிலான குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திகொள்ள வேண்டுகிறோம் என இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.