ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குந்தி மாவட்டத்தில் இந்த நிலநடுக்கமானது உணரப்பட்டது. சரியாக இன்று காலை 9.30 மணி அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 3.6 ஆக பதிவானதாக இந்திய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது 5 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருந்ததாகவும் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக மக்கள் பீதி அடைந்தனர். ஏராளமான மக்கள் நிலநடுக்கம் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் மற்றும் பொருட்சேதம் தொடர்பான எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.