புதுக்கோட்டையிலிருந்து அரசுப் பேருந்து ஒன்று கோவை நோக்கி கரூர் வழியாக சென்று கொண்டிருந்தது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் அருகே வந்த போது அங்கு மது போதையில் இருந்த நபர் அரசுப் பேருந்தின் முன்பக்க கண்ணாடி மீது கல்லை தூக்கி வீசியதில் கண்ணாடி விரிசல் விழுந்தது.
சாலையின் ஓரத்தில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநரும், நடத்துனரும் பேருந்தை விட்டு இறங்கி சென்று அங்கு கல் வீசிய நபரை பிடித்து பேருந்து நிலையத்திற்கு அழைத்து வந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவ நடந்த இடம் பசுபதிபாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட இடம் என்பதால் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பசுபதிபாளையம் காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு
விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பஸ்சின் மீது கல் வீசிய இளைஞர் பெயர் தினேஷ் என்றும், மதுபோதையில் இருக்கும் அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். ஓட்டுநர் புதுக்கோட்டைய சார்ந்த கணபதி கொடுத்த புகாரின் பெயரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.