Skip to content
Home » பீர்பாட்டில் குத்து…..திருச்சி ஓட்டல் தொழிலாளி ஆஸ்பத்திரியில் அனுமதி

பீர்பாட்டில் குத்து…..திருச்சி ஓட்டல் தொழிலாளி ஆஸ்பத்திரியில் அனுமதி

திருவாரூர்  மாவட்டம் மன்னார்குடி, கிழக்குத் தெருவை சேர்ந்தவர் அஸ்வின் (30). இவர் திருச்சி என்எஸ்பி சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் தங்கி வேலை செய்து வருகிறார்.  கடந்த 29ந்தேதி இவர் தன் சக ஊழியர்கள் வைத்திருந்த மதுவை அவர்களது அனுமதியின்றி அருந்தியுள்ளார். இதனால் அஸ்வினுக்கும்  சக ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது, இதில் ஆத்திரமடைந்த அவர்கள் அஸ்வினை பீர் பாட்டிலால் அடித்து காயப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் தலை மற்றும் வயிற்றில் பலத்த காயம் அடைந்த அஸ்வின் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து திருச்சி முதலியார் சத்திரம் நடுத்தெருவை சேர்ந்த உணவகத்தின் மேலாளர் ரமேஷ் (52)அளித்த புகாரின் பேரில் அஸ்வினை தாக்கிய சிவகாசியை சேர்ந்த முருகன் (25), பெரம்பலூரை சேர்ந்த வேல்முருகன் (28), திருச்சி திருவானைக்காவலை சேர்ந்த குணசேகரன் ( 21), தஞ்சையை சேர்ந்த ஹரிஷ்  21)ஆகிய 4 பேரை கோட்டை போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!