கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார் ஆகியோருடன் இணைந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் நிதி ஆதாரத்துக்கு மீறி அதிக வாக்குறுதிகளை அளிக்க வேண்டாம் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர்களை எச்சரித்துள்ளேன். உங்களால் முடிந்த அளவு மட்டும் வாக்குறுதிகளை அளிக்க வேண்டும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் மோடி கூறியிருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த மல்லிகார்ஜுன கார்கே, “நாடாளுமன்றத்தில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தாமல் இத்திட்டத்தை அமல்படுத்த முடியாது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் நம்பிக்கையை பெறாமல் இத்திட்டம் அமலாக முடியாது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் அமலாவதற்கு வாய்ப்பே இல்லை” என கூறினார்.