தீபாவளிக்காக ஈரோட்டில் புதுப்புது ரக ஜவுளிகள் குவிக்கப்பட்டு வியாபாரம் நடைபெறும். மொத்த வியாபாரம், சில்லறை வியாபாரம் என ஒருமாதமாக தீபாவளி வியாபரம் அமோகமாக நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு மறுநாள் ஈரோட்டில் அதிக தள்ளுபடியுடன் வியாபாரம் நடைபெறும். அதன்படி இன்றும் தள்ளுபடி விற்பனை நடந்தது.
இதற்காக அதிகாலை 4 மணிக்கே மக்கள் ஈரோடு கடைவீதிகளுக்கு வந்தனர். ஆர்கே.வி சாலையில் உள்ள அனைத்து கடைகளிலும் 50% தள்ளுபடியில் ஜவுளிகள் விற்பனை நடந்தது. இதற்காக ஈரோடு மட்டுமல்லாமல் பக்கத்து மாவட்டங்களை சேர்ந்தவர்களும் அதிகாலையிலேயே குவிந்தனர். சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குவிந்ததால் வியாபாரம் களை கட்டியது. இன்று இரவு வரை தள்ளுபடி விற்பனை நடைபெறும் என்பதால் மக்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள்.