தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமரன் திரைப்படத்தை பார்த்து விட்டு அதில் நடித்த கலைஞர்களுக்கு பாராட்டு தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து படத்தயாரிப்பாளரான கமல்ஹாசன் முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு நன்றி தெரிவித்து வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
எங்களது அழைப்பை ஏற்று அமரன் திரைப்படத்தைப் பார்த்து ரசித்ததோடு, படத்தையும், அதில் பங்களிப்பாற்றிய கலைஞர்களையும் மனதார பாராட்டிய தமிழ்நாடு முதல்வரும், என் அன்பிற்கினிய நண்பருமான மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ்நாட்டின் துணை முதல்-அமைச்சரும், என் அன்பு இளவலுமான உதயநிதி ஸ்டாலினுக்கும் எங்களது மனமார்ந்த நன்றி. முதல்-அமைச்சரின் பாராட்டு அமரனின் பெரும் வெற்றிக்கு அறிகுறி. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.