மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பரசுராம் சேது மற்றும் சுப்ரியா தம்பதியர் தொழில் நிமித்தமாக கேரளாவில் வசித்து வருகிறார்கள் . இவர்களது 15 வயது மகள் தபஸ்யா.
பள்ளியில் பயிலும் சக மாணவர்களுடன் தபஸ்யா கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது பந்தை எதிர்கொள்ள அவர் தயாராவதற்கு முன்னதாகவே எதிர்முனையில் இருந்த பந்து வீச்சாளர் பந்தை வீசியுள்ளார். அதை தபஸ்யா தடுப்பதற்குள் பந்து தலையில் பட்டுள்ளது. அப்படியே அவர் களத்தில் நிலைகுலைந்து சரிந்து விழுந்தார். அப்போது அவர் தலைக்கவசம் அணியவில்லை என பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டக்கல் மருத்துவமனையில் தபஸ்யா அனுமதிக்கப்பட்டார்.. அங்கு மூன்று நாட்கள் சிகிச்சை பெற்ற நிலையில் கோழிக்கோடு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கிருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி தபஸ்யா உயிரிழந்தார்.