தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த பண்ணவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் தீபன்(33) இவர் தஞ்சை தெற்கு மாவட்ட ஐ.டி. விங் இணைச் செயலாளராக இருக்கிறார். சில தினங்களுக்கு முன் தான் இந்த பதவியில் நியமிக்கப்பட்டார். பதவி கிடைத்த மறுநாளே தீபன் , அதே ஊரைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவியை பாலியல் தொந்தரவு செய்தாராம். இது தொடர்பாக பட்டுக்கோட்டை மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தீபனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.