விருதுநகர் ஸ்டாண்ட் காலனியை சேர்ந்த அய்யாதுரை மகன் வெங்கடாஜலபதி (26) டாக்டர். இவர் காரைக்குடியில் உள்ள பிரபல மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார்.
தீபாவளி பண்டிகைக்காக வீட்டுக்கு செல்வதற்காக காரைக்குடியில் இருந்து தஞ்சை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி அருகே உள்ள அசூர் பகுதியில் வந்தபோது அசூர் பிரிவு ரோட்டில் இருந்து இரு சக்கர வாகனத்தில் ஒருவர் வந்ததால் அவர் மீது மோதாமல் இருப்பதற்காக காரை திருப்பியப்போது. சாலை ஓரம் உள்ள வாய்க்காலில் கார் பாய்ந்த.து அதிர்ஷ்டவசமாக வெங்கடாஜலபதிக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.
இச்சம்பவம் பற்றி துவாக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டதோடு சம்பவம் குறித்து விசாரணைநடத்தினர்.