பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் தேவர் ஜெயந்தி விழாவாக தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் அக்டோபர் 30-ம் நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தவெக தலைவர் விஜய் தனது X-தளத்தில் கூறியிருப்பதாவது… அய்யா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனார். இந்திய விடுதலைக்காகக் காத்திரமாக களமாடியவர் முத்துராமலிங்க தேவர். மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் படையை வலுப்படுத்தத் துணை நின்றவர். பாராளுமன்ற சட்டமன்ற அரசியலில் முத்திரை பதித்த பேச்சுக் கலைப் பேரரசர். தமிழக அரசியிலின் முக்கிய அடையாளங்களில் ஒருவராக மாறிய மகத்தான மனிதரை அவரது குருபூஜைத் திருநாளில் வணங்கி வாழ்த்திப் போற்றுவோம். என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.