திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் அருகில் ஜெ.ஜெ.நகரில் தமிழ்நாடு அரசு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பினை முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
ஜெ.ஜெ.நகரில் நடைபெற்ற விழா நிகழ்வில் மாவட்ட கலெக்டர் .மா.பிரதீப் குமார்., ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் .எம்.பழனியாண்டி ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து புதிய அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடத்தினை பார்வையிட்டனர்.
இந்நிகழ்வில், உதவி ஆட்சியர் (பயிற்சி) அமித்குப்தா,ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் தட்சிணாமூர்த்தி, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் நிர்வாக பொறியாளர் ஜே.இமாகுலேட் ராஜேஸ்வரி, உதவி பொறியாளர் ம.சங்கவி, மாநகராட்சி உதவி ஆணையர் கா.ஜெயபாரதி, அரசு அலுவலர்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.