திருச்சி, கருமண்டபம் ஜேபி நகர் 5வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் (36) தனியார் நிறுவன ஊழியர் இவரது மனைவி நந்தினி 34. கும்பகோணம் ரயில் நிலையத்தில் ரயில்வே கிளாருக்காக பணியாற்றி வருகிறார் இந்த தம்பதியருக்கு 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி 2 ஆண் குழந்தைகள். இந்நிலையில் மனைவியின் நடத்தையில் ஆரோக்கியதாசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மேலும் ஆரோக்கியதாஸ் மனைவியை அடித்து வந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஆரோக்கியதாஸ் கத்தியால் அவரை குத்தியுள்ளார். இதில் அவரது காது மற்றும் மூக்கு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஸ்பெஷல் கோர்ட் போலீசார் ஆரோக்கியதாஸ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருச்சியில் 9ம் வகுப்பு மாணவி மாயம்…
மதுரை சோலை அழகுபுரம் ராமமூர்த்தி நகர் நான்காவது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் முத்து இருளாண்டி. இவரது மகள் கார்த்திகா (15). இவர் 9ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 21 ம் தேதி முத்து இருளாண்டி தனது மகளை திருச்சி உறையூர் முதலியார் தெரு பகுதியிலுள்ள வளர்மதி என்ற தனது உறவினர் வீட்டில் விட்டுச் சென்றார். பின்னர் 2
நாட்கள் கழித்து அருகில் உள்ள கடைக்கு செல்வதாக கார்த்திகா கூறி சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இவர் ஏற்கனவே பலமுறை வீட்டில் இருந்து காணாமல் சென்றுள்ளார் . பின்னர் சில தினங்கள் கழித்து வீடு திரும்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதற்காக அவரது உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். மீண்டும் அங்கிருந்து அவர் மாயமாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.