புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், வாக்காளர் பட்டியல் சிறப்பு முறை சுருக்கத் திருத்தம் 2025 க்கான வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் மு.அருணா, இன்று வெளியிட்டார். இதில் அனைத்து கட்சித்தலைவர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் கலெக்டர் அருணா அளித்த பேட்டி:
புதுக்கோட்டை மாவட்டத்தில் 6,69,474 ஆண் வாக்காளர்கள், 6,85,211 பெண் வாக்காளர்கள் மற்றும் 67 மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்த்து மொத்தம் 13,54,752 வாக்காளர்கள் 2024-ம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் (Integrated Draft Roll) பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
2024ஆம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியலில் (Final Roll) (27.03.2024ன்படி) மொத்தம் 13,45,361 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.
17.03.2024 முதல் 29.09.2024 வரை நடைபெற்ற 2024ம் ஆண்டிற்கான தொடர் திருத்தத்தின்போது (Continuous Updation ) 6,018 ஆண் வாக்காளர்கள், 6,547 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 10 சேர்த்து மொத்தம் 12,575 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
17.03.2024 முதல் 29.09.2024 வரை நடைபெற்ற 2024ம் ஆண்டிற்கான தொடர் (Continuous Updation) 1,623 ஆண் வாக்காளர்கள், 1,918 பெண் வாக்காளர்கள் மற்றும் 2 மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்த்து மொத்தம் 3,543 வாக்காளர்கள் நீக்கம் (Deletion) செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1561 வாக்குசாவடி மையங்கள் (Polling Stations) உள்ளன. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர எல்கைக்குள் 83 வாக்குச்சாவடி அமைவிடங்கள் மற்றும் கிராம எல்கைக்குள் 864 வாக்குச்சாவடி அமைவிடங்கள் என மொத்தம் 947 வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி அமைவிடங்கள் (Designated Locations) உள்ளன.
சிறப்பு முறை சுருக்கத் திருத்தம் 2025-இன் தொடர்ச்சியாக, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் / நீக்கம் / திருத்தம் தொடர்பான மனுக்கள் பெற 29.10.2024 முதல் 28.11.2024 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
Special Summary Revision விண்ணப்பம் பெறுவதற்கு ஆணையத்தால் வகுக்கப்பட்ட காலமான 29.10.2024 முதல் 28.11.2024 வரையிலும் ஜனவரி 1-ம் நாள், ஏப்ரல் 1-ம் நாள், ஜூலை 1-ம் நாள் மற்றும் அக்டோபர் 1- நாட்களில் 18 வயது பூர்த்தியடைந்த தகுதியான (Advance Applications) பூர்த்தி செய்து பெறலாம். இந்த படிவங்கள் சம்மந்தப்பட்ட நபரின் பிறந்த நாளினை வைத்து தகுதியேற்படுத்தும் நாட்கள் (Qualifying Date) அடிப்படையில் அந்தந்த காலாண்டில் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்படும்.
சிறப்பு முறை சுருக்கத் திருத்தம் 2025-க்கான காலத்தில் (29.10.2024 முதல் 28.11.2024 வரை) பெறப்பட்ட படிவங்களில் 2025 ஜனவரி -1ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்ட (Qualifying Date) படிவங்கள் (6, 7 மற்றும் 8) மட்டுமே பரிசீலனை செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். மேலும் 28.11.2024-க்கு பிறகு பெறப்பட்ட விண்ணப்பங்களை ஏப்ரல்-1, ஜூலை -1, மற்றும் அக்டோபர்-1 ஆகிய தகுதியேற்படுத்தும் நாட்களை (Qualifying Date) அடிப்படையாகக் கொண்டு மேற்குறிப்பிட்ட மூன்று தகுதியேற்படுத்தும் நாட்களில் (Qualifying Date) 18 வயது நிறைவடைந்த விண்ணப்பதாரர்களின் படிவங்களை தொடர் திருத்தக் காலத்தில் (Continuous Updation) வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.
வாக்காளர்களின் வசதிக்கேற்ப 16.11.2024 (சனிக்கிழமை), 17.11.2024 (ஞாயிற்றுக்கிழமை), 23.11.2024 (சனிக்கிழமை) மற்றும் 24.11.2024 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 4 தினங்கள் சிறப்பு முகாம்கள் (Special Camps) 947 வரையறுக்கப்பட்ட வாக்குச்சாவடி அமைவிடங்களில் (Designated Locations) நடைபெறும்.
2025ம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியல் (Final Roll) எதிர்வரும் 06.01.2025 (திங்கள்கிழமை) அன்று வெளியிடப்பட உள்ளது எனவும் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் .மு.அருணா, தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் , மாவட்ட வருவாய் அலுவலர் .அ.கோ.ராஜராஜன் , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) .முருகேசன், வருவாய் கோட்டாட்சியர்கள் பா.ஐஸ்வர்யா (புதுக்கோட்டை), .ச.சிவக்குமார் (அறந்தாங்கி), அ.அக்பர்அலி (இலுப்பூர்), தனி வட்டாட்சியர் (தேர்தல்) அ.சோனை கருப்பையா, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.