அமெரிக்காவின் 60வது அதிபரை தேர்வு செய்வதற்கான அதிகாரப்பூர்வ தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. இருப்பினும் தேர்தல் நாளுக்கு முன்பே நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ தங்களது வாக்கினை பதிவு செய்யும் வசதி அமெரிக்க வாக்காளர்களுக்கு உள்ளது. இதனால் அங்கு ஒவ்வொரு அதிபர் தேர்தலின் போதும் முன்கூட்டியே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெறும். அந்த வகையில் அமெரிக்காவில் பல்வேறு மாநிலங்களில் சில வாரங்களுக்கு முன்பு வாக்களிக்கும் நடைமுறை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், டெலாவரில் உள்ள வாக்குச் சாவடியில் அதிபர் ஜோபிடன் தனது வாக்கினை பதிவு செய்தார். 45 நிமிடம் வாக்காளர்களுடன் வரிசையில் நின்று ஜோபிடன் ஜனநாயக கடமை ஆற்றினார். அதிபர் தேர்தல் நாளான நவம்பர் 5ம் தேதி வாக்குச் சாவடிகளுக்கு செல்ல முடியாத அமெரிக்க குடிமக்கள் தபால் மூலமாகவும் வாக்களித்து வருகின்றனர். இதுவரை தேர்தலுக்கு முந்தைய வாக்குப்பதிவு மற்றும் தபால் மூலமாக மட்டும் 2.5 கோடிக்கு அதிகமான வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்களித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.