அரியலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.
அரியலூர் மாவட்டத்திலுள்ள 149-அரியலூர் சட்டமன்றத் தொகுதி மற்றும் 150-ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி ஆகியவற்றிற்கான ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் இன்று 29.10.2024 வெளியிடப்படுகிறது. இதன்படி, 149-அரியலூர் சட்டமன்றத் தொகுதியில் 1,29,091 ஆண் வாக்காளர்களும், 1,29,839 பெண் வாக்காளர்களும். 08 இதர வாக்காளர்களும் மொத்தம் 2,58,938 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் 150-ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் 1,28,667 ஆண் வாக்காளர்களும், 1,30,367 பெண் வாக்காளர்களும், 09 வாக்காளர்களும், மொத்தம் 2,59,043 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தின் மொத்த வாக்காளர்கள் 5,17,981 ஆகும்.
01.01.2025 நாளை தகுதி நாளாகக் கொண்டு 2025-ஆம் ஆண்டில் 18-வயது பூர்த்தியடைந்த அனைவரும் தங்கள் பெயரினை சேர்க்கவும், இறந்த நபர்கள், நிரந்தரமாக முகவரி மாறியவர்களை வாக்காளர் பட்டியலில் நீக்கம் செய்திடவும், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் தங்கள் முகவரியில் மாற்றம் செய்யவும், வாக்காளர்களின் பெயர், முகவரி, வயது மற்றும் இதர வகைகளில் உள்ள பிழைகளை திருத்தம் செய்வதற்குரிய படிவங்களை அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம். வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்தில் 29.10.2024 முதல் 28.11.2024 வரை படிவங்களை பெற்று, அப்படிவங்களை பூர்த்தி செய்து வழங்கிடலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பிழைதிருத்தம் மற்றும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றிற்கு விண்ணப்பிக்க) அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் 16.11.2024, 17.11.2024, 23.11.2024 மற்றும் 24.11.2024 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இச்சிறப்பு முகாம் நாட்களை தகுதியுள்ள வாக்காளர்கள் பயன்படுத்திட தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் இந்திய அரசியல் கட்சிகள் ஆணையத்தின் ஒவ்வொரு அறிவுரைப்படி வாக்குச்சாவடி மையத்திற்கும் வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்கலாம். அம்முகவர்கள் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2025 மற்றும் சிறப்பு முகாம் நாட்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு திருத்தங்கள் மற்றும் பிறவற்றை அடையாளம் காண உதவி செய்யலாம். வாக்குச்சாவடி நிலை முகவர்கள், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள இறந்த மற்றும் இடம் பெயர்ந்த வாக்காளர்கள் பற்றி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் நிர்ணயிக்கப்பட்ட படிவங்களில் தகவல் வழங்கலாம். மேலும் பெறப்பட்ட கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகள் மீது டிசம்பர் மாதம் 24 ஆம் தேதிக்குள் முடிவு செய்யப்பட்டு ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர்கள் பட்டியல் 06.01.2025 அன்று வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் மணிகண்டன், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, அரசு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.