தமிழ்நாடு முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அந்தந்த மாவட்டங்களுக்கான பட்டியலை அம்மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டனர். சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரி குமரகுருபரன் வெளியிட்டார்.
இதில், ஆண் வாக்காளர்கள் 19,41,271 பேரும், பெண்கள் 20 லட்சத்து 9 ஆயிரத்து 975-பேரும் இயம்பெற்றுள்ளனர்.இதர வாக்காளர்கள் 1,252 பேரும் என மொத்தம் 39 லட்சத்து 52 ஆயிரத்து 498 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.மேலும் 25,628 ஆண் வாக்காளர்கள், 27,669 பெண் வாக்காளர்கள் மற்றும் 62 இதர வாக்காளர்கள் என மொத்தம் 53,359 வாக்காளர்களின் பெயர்கள் புதியதாக பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் நவ. 16, 17, 23, 24 தேதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இன்று முதல் ஜனவரி 6 வரை வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம். மேலும், பொதுமக்கள் இணையதளம் மூலமாகவும் தங்களுடைய பெயர்கள் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம். https://voters.eci.gov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
*வரைவு வாக்காளர் பட்டியல்படி நெல்லை மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில் 13.88 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் 13.54 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளில் 18.89 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் 14.65 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.