Skip to content
Home » மோடியால் ரஷிய போரை நிறுத்த உதவ முடியும்.. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நம்பிக்கை..

மோடியால் ரஷிய போரை நிறுத்த உதவ முடியும்.. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நம்பிக்கை..

  • by Senthil

உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த நாடு மீது போர் தொடுத்தது. 2 ஆண்டுகளையும் கடந்து இருநாடுகளுக்கும் இடையேயான போர் தொடர்கிறது. ரஷியா- உக்ரைன் போரை நிறுத்த வேண்டும் என பல்வேறு நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் பிரதமர் மோடியால் ரஷ்ய போரை நிறுத்த உதவ முடியும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜெலன்ஸ்கி கூறுகையில், ” உலகின் மிகப்பெரிய நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். அதிக மக்கள் தொகை கொண்ட நாடு, 5-வது மிகப்பெரிய பொருளாதார நாடு என பல்வேறு சிறப்புகளை இந்தியா பெற்றிருக்கிறது. சர்வதேச அரசியலில் அந்த நாடு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி உலகின் செல்வாக்குமிக்க தலைவராக விளங்குகிறார். உக்ரைன் போரை நிறுத்த அவரால் உதவ முடியும். இதுதொடர்பாக இந்தியாவில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பு உள்ளது” என ஜெலன்ஸ்கி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!