சென்னையை அடுத்த இ.சி.ஆர்., ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சங்கீதா(40) தனியார் பள்ளி தலைமை ஆசிரியை. திருமணமாகி இரு பிள்ளைகள் உள்ளன.சமீபத்தில் அப்பள்ளியில் 22வயது இளம் பெண் ஒருவர் ஆசிரியையாக பணிக்கு சேர்ந்தார். அரையாண்டு தேர்வு தொடர்பாக விவாதிக்க, அந்த இளம் ஆசிரியையை தன் வீட்டுக்கு சங்கீதா அழைத்துள்ளார். வீட்டு வந்த சங்கீதாவை, படுக்கை அறையில் உட்கார வைத்து, குடிக்க குளிர்பானம் கொடுத்துள்ளார்.அதை குடித்த சில நிமிடங்களில், இளம்பெண் ஆசிரியை மயங்கினார். இதையடுத்து அவரிடம், தலைமை ஆசிரியை தவறாக நடந்துள்ளார். மயக்கம் தெளிந்து விழித்தபோது, உடலில் ஆங்காங்கே காயத்துடன் பாலியல் வன்புணர்வு செய்தது தெரிந்தது. இந்த சம்பவம் தொடர்பாக இளம் ஆசிரியை , திருவான்மியூர் மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் போலீசார் தலைமை ஆசிரியை சங்கீதாவை கைது செய்தனர்.