தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில், அசோகன் ஆபரண மாளிகை செயல்பட்டு வந்தது. இங்கு நகை சிறுசேமிப்பு திட்டம், மற்ற வங்கிகளில் உள்ள அடமானம் வைத்த நகைக்களை மீட்டு, வட்டி இல்லா கடன் வழங்கப்படும் போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்கள் அறிவிக்கப்பட்டது. இதனால், ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் முதலீடு செய்து இருந்தனர்.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் ஒரத்தநாட்டில் கிளையில், ஒரு சிலர் அடமானம் வைத்த நகைகளை மீட்க சென்றுள்ளனர். அப்போது, கடையிலுள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் அனைத்தையும் கடை ஊழியர்கள் எடுத்துக்கொண்டு காலி செய்துவிட்டு சென்று விட்டனர்.
இத்தகவல் அப்பகுதியில் பரவியதையடுத்து பாதிக்கப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் கடையை முற்றுகையிட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பாதிக்கப்பட்டவர்களிடம் பேசி, புகார் அளிக்க நடவடிக்கை எடுத்தனர்.
இதையடுத்து ஒரத்தநாட்டில், பாதிக்கப்பட்ட சுமார் 500க்கும் மேற்பட்டோர், அசோகன் தங்க மாளிகை கடை எதிராக புகார் அளித்து வருகின்றனர். இதே போல், பட்டுக்கோட்டை, திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளிலும் நகைக்கடை வைத்து அதன் உரிமையாளர் சுமார் ஆயிரக்கணக்கனோர் புகார் அளிக்க போலீஸ் ஸ்டேஷனிகளில் குவிந்து வந்தனர். இதேபோல் ருகின்றனர். அத்துடன் போலீசாரும், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என பிளக்ஸ் வைத்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.