Skip to content

விஜயை அரசியலில் இறக்கியது பாஜக? சபாநாயகர் அப்பாவு சொல்கிறார்

  • by Authour

நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையில் இருந்து பிசான சாகுபடிக்காக தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு இன்று (அக்.28) தண்ணீர் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: “பாபநாசம் அணையில் இன்று திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் நெல்லை மற்றும் தூத்துக்குடியில் சுமார் 86,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பயன்பெறுவார்கள். விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் பொறுப்பேற்ற பிறகு 400 கோடி ரூபாயில் மூன்று லட்சம் டன் நெல்லை கொள்முதல் செய்யும் அளவுக்கு குடோன்கள் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே ரேஷன் கடைகளில் தரமான அரிசி தற்போது மக்களுக்கு கிடைக்கிறது.

திமுக குறித்து, பணம் சம்பாதிப்பதாக கூறி இருக்கிறார். புதிதாக கட்சி தொடங்கும் போது இந்த வார்த்தையை அவர் தவிர்த்து இருக்கலாம். புஸ்ஸி ஆனந்த் கிரிமினல், என்று விஜய்யின் தந்தையே சொல்லி இருக்கிறார். எனவே, ஒரு கிரிமனலை எப்படி அக்கட்சியின் பொதுச் செயலாளராக நியமித்தார் என்று தெரியவில்லை? ஒருவேளை கிரிமினல் இப்போது நல்லவராக மாறிவிட்டாரா? என்னவோ நடிகர் விஜய் வருமானவரித் துறை சோதனையில் சிக்கிய போது, குற்றவாளியை போல் வருமானவரித் துறை காரில் அழைத்து சென்றனர். அப்போது அவருக்கு ஆதரவாக திமுக தான் குரல் கொடுத்தது.

குற்றம் இருப்பதால்தான் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். எனவே, ஒருவர் மற்றவர்களை குறை சொல்லும் போது தான் உண்மையாக இருக்க வேண்டும். ஏற்கெனவே, பாஜகவில் இருந்து ரஜினியை அரசியலுக்கு கொண்டுவர முயற்சித்தார்கள். அவர் வரவில்லை, என்பதால் அவருக்கு பதிலாக விஜய்யை ஏற்பாடு செய்திருப்பார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. திமுக அரசு பல நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் 6 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் 75 ஆயிரம் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்பட இருக்கிறது. எனவே, இந்த அரசை எத்தனை விமர்சனங்கள் செய்தாலும் தாங்க கூடிய அரசாக, மக்கள் நலனுக்காக தொடர்ந்து செயல்படும்.” என்று அவர் கூறினார்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!