மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு; மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர். அக்டோபர் 28ஆம் தேதி முதல் நவம்பர் 3ஆம் தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. முதல் நாளான இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மாவட்டம் முழுவதிலும் இருந்து மாவட்ட ஆட்சியரின் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு வந்திருந்த வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.
மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி.
- by Authour
