விக்கிரவாண்டியில் நேற்ற தவெக மாநாடு நடந்தது. இதில் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் பேசினார். அப்போது அவர் திமுகவையும், பாஜகவையும் தாக்கி பேசினார். அவரது பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் ரகுபதி கூறியதாவது: “விஜய் ‘ஏ டீமும்’ இல்லை, ‘பி டீமும்’ இல்லை. பாஜகவின் ‘சி டீம்’. நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாடு பிரமாண்ட சினிமா மாநாடு.அ.தி.மு.க. பற்றி பேசினால் எடுபடாது என்பதால் தி.மு.க. பற்றி விஜய் பேசி உள்ளார். அ.தி.மு.க.வின் வாக்குகளை ஈர்ப்பதற்காக, அ.தி.மு.க. பற்றி விஜய் பேசவில்லை
அ.தி.மு.க. தொண்டர்களை பிரிப்பதே விஜய்யின் குறிக்கோள். பா.ஜ.க.வை வலுப்படுத்தும் வகையில், அ.தி.மு.க. தொண்டர்களை பிரிப்பதே விஜய்யின் குறிக்கோள். நேற்று விஜய் கூட்டிய கூட்டம் போன்று ஏற்கனவே தி.மு.க. நிறைய கூட்டம் நடத்தி உள்ளது. திராவிட மாடல் ஆட்சியை மக்களிடம் இருந்து பிரிக்க முடியாது. சிறுபான்மையினர் நலன் மற்றும் கொள்கைக்காக 2 முறை ஆட்சியை இழந்த கட்சி தி.மு.க. கவர்னரை எதிர்த்து பேசினால் தான் தமிழகத்தில் எடுபடும். திராவிடம் தமிழகத்தில் இருந்து அகற்ற முடியாத சொல். இளைஞர்கள் நம்பும் ஒரு இயக்கமாக தி.மு.க. உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.