தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில மாநாடு இன்று மாலை விக்கிரவாண்டியை அடுத்த வி. சாலையில் துவங்கியது. மாநாட்டு மேடைக்கு சரியாக நான்கு மணிக்கு தவெக தலைவர் விஜய் வருகை தந்துள்ளார். வந்துடன் மேடையில் வைக்கப்பட்டிருந்த சுதந்திர போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகளின் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் தவெக தலைவர் விஜய். அடுத்த மாநாட்டு மேடையில் இருந்து ரேம்பில் நடந்து வந்து கட்சிக்கொடியை ரிமோட் மூலம் எற்றினார். தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் செயல் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதன் விவரம் *கவர்னர் பதவியை அகற்ற வேண்டும் *ஆராய்ச்சி கல்வி வரை தமிழ் மொழி வழியிலேயே கல்வி கற்க உறுதி *சாதி வாரி கணக்கெடுப்பு *மதுரையில் தலைமை செயலக கிளை *அனைவருக்கும் விகிதாச்சாரப்படி இடஒதுக்கீடு என அறிவிக்கப்பட்டது.