தீபாவளியையொட்டி திருச்சி மாநகரின் முக்கியமான வியாபார தளங்களான என்எஸ்பி ரோடு, பெரிய கடை வீதி, சின்ன கடை வீதி உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் மற்றும் திருட்டு சம்பவங்களை தடுக்க மாநகர போலீசார் சார்பில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் மலைக்கோட்டை. பூம்புகார், தெப்பக்குளம் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கபட்டுள்ளது. அதில் ஏறி போலீசார் கண்காணிக்க வசதி செய்யவில்லை. என நேற்றைய etamilnews.com ல் ‘ பெயருக்கு கண்காணிப்பு கோபுரங்கள்’.. கண்டுகொள்ளாத சிட்டி போலீஸ் அதிகாரிகள்.. என்கிற தலைப்பில் செய்தி வெளியிட்டது.
இந்த செய்தியின் எதிரொலியாக இன்று கண்காணிப்பு கோபுரங்களில் இன்று ஏணி வசதி ஏற்படுத்தி அதில் போலீசார் கண்காணிக்கும் பணி துவங்கியது. உடனடியாக நடவடிக்கை எடுத்த மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு etamilnews.com நன்றி தெரிவித்துக்கொள்கிறது..