திருச்சி மன்னார்புரம் புது காலனி பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் ( 59) இவர் திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் அருகே ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு திருச்சி சுப்பிரமணியபுரம் பள்ளிவாசல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் நந்தன் (45). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். 2 பேரும் நண்பர்களாக பழகி வந்தனர்.
இந்நிலையில் செல்வம் மண்ணச்சநல்லூர் திருப்பைஞ்சிலி அருகே நிலம் வாங்குவதற்காக நந்தனிடம் ரூ.10 லட்சத்து 5 ஆயிரம் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிக் கொண்டு அந்த நிலத்தை செல்வம் பெயருக்கு பதிவு செய்யாமல் ஏமாற்றியதாக தெரிகிறது. இதையடுத்து செல்வம் மற்றும் அவரது மகன் இருவரும் சேர்ந்து கே. கே.நகர் அரிசி குடோன் அருகே சென்று நந்தனிடம் தாங்கள் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்த நண்பன் அவர்களை தகாத வார்த்தையால் திட்டி உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் நந்தன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இதுகுறித்த செல்வம் கே.கே. நகர் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தனை கைது செய்தனர்.