திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகரில் மனநலம் பாதித்த மருமகள் மாமியாரை குத்திக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த சம்பவத்தில் மருமகளை போலீசார் கைது செய்தனர் .போலீஸ் விசாரணையில் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் பீடி காலனியை சேர்ந்தவர் அக்பர் அலி. இவரது மனைவி சம்சத் (55)அக்பர் அலி ஏற்கனவே இறந்துவிட்டார். இவர்களுக்கு சிராஜ் என்ற ,மகனும் நிஷா என்ற மகளும் உள்ளனர்.
இவர்கள் 2 பேருக்கும் திருமணம் ஆகி விட்டது. சிராஜ் கவரிங் நகை செய்யும் வேலை பார்த்து வருகிறார்.
அவருக்கு ஆயிஷா பேகம் ( 22 ) என்ற பெண்ணுக்கும் கடந்த 2 வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் இவர்களுக்கு 9 மாதத்தில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. ஆயிஷா பேகம் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும், இதற்காக மனநல ஆலோசகரிடம் ட்ரீட்மென்ட் எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆயிஷா பேகம் சில நேரங்களில் என்ன செய்கிறோம் என்பதை தெரியாமல் செய்து விடுவார் என்றும் ஏற்கனவே சம்சாத்தை தலையணையை கொண்டு முகத்தில் வைத்து அழுத்தியும், கழுத்தை நெறித்தும் கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாமியார், மருமகள் குடும்பத்தினர் அனைவரும் ஒடுகம்பட்டி தர்காவிற்கு சென்று மருமகளுக்கு கையில் கயிறு கட்டி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாமியார், மருமகள் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது தன்னுடைய கையில் இருக்கும் கயிறை கழட்டும்படி மாமியாரிடம் கேட்டு சண்டையிட்டதாக கூறப்படுகிறது. அப்போது மருமகள் ஆயிஷா கோபத்தில் வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை கொண்டு மாமியார் சம்சாத் பேகத்தை இடுப்பு மற்றும் நெஞ்சு பகுதியில் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில் மாமியார் சம்சாத் பேகம் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடி துடித்து உயிரிழந்தார். மேலும் கொலையாளி மருமகள் மாமியாரை கொலை செய்துவிட்டு வீட்டிலே இருந்துள்ளார்.
இதனிடையே வீட்டிலிருந்து குழந்தை நபீஷாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது குழந்தை காயத்துடன் இருந்ததை கண்டனர். இச்சம்பவத்தில் தடுக்கச் சென்ற உறவினர் ரஹ்மத் நிஷா என்பவரும் காயம் அடைந்தார். உடனே குழந்தை நபிஷா மற்றும் ரஹமத்து நிஷா ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த
அரியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர். போலீசாரை கண்ட மருமகள் ஆயிஷா மயங்கி விழுவே அவரை மீட்டு திருச்சிக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரித்தனர்.
மேலும் ஆயிஷா மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்தனர். இதையடுத்து அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் ஆயிஷா பீவியிடம் தொழுகை துருவி விசாரணை செய்தனர். விசாரணை குறித்து போலீசார் கூறும்போது.. மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே முதலில் இருந்தே பிடிக்கவில்லை. அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த கொலையை மருமகள் ஆயிஷா பீவி திட்டமிட்டு செய்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் ஆயிஷா பிவியை கைது செய்தனர். இதற்கிடையில் இறந்து போன சம்சாத் பேகத்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையில் கைதான மருமகள் ஆயிஷா பீவியை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி இன்று மாலை சிறையில் அடைக்க உள்ளனர்.