கோவை, பொள்ளாச்சி பல்லடம் சாலை ரோட்டரி கிளப்பில் பொள்ளாச்சி சேம்பர் ஆஃப் காமர்ஸ், ரோட்டரி கிளப் சார்பில் விவிடிஎன் தனியார் கம்பெனி பங்குதாரர்களுக்கு பொள்ளாச்சி எம்பி சண்முகசுந்தரம் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் சமீரான்,பொள்ளாச்சி துணை ஆட்சியர் பிரியங்கா மற்றும் தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் பங்கேற்றனர்,எம்பி கூறுகையில் பொள்ளாச்சி அருகே
100 ஏக்கர் பரப்பளவில் வி வி டி என் தனியார் தொழிற்சாலை கிராமப்புற பெண்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாகவும்,உதிரி பாகங்கள் தயாரிப்பில் உள்ளனர்.
இங்கு தயாரிக்கப்படும் உதிரிபாகங்கள் கொரியா,கனடா என நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது,மேலும் தமிழக அரசு கிராமப்புற பெண்கள் மற்றும் பொள்ளாச்சி வளர்ச்சி பெற தனியார் தொழிற்சாலை ஆரம்பிக்க அனுமதி அளித்துள்ளது,இது மாதிரி தொழிற்சாலைகள் முதலீடுகள் செய்யவும் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார்
தொழிற்சாலைகள் மூலம் எதிர்காலத்தில் 25,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக உள்ளது என எம்.பி. தெரிவித்தார். கிராமப்புறத்தில் இருந்து வந்த பெண் கூறுகையில் நூறு பெண்களை பேரை டெல்லி அழைத்துச் சென்று உதிரி பாகங்கள் தயாரிப்பதற்கு குறித்து பயிற்சி அளித்தனர்,இதனால் வி பி டி என் தனியார் தொழிற்சாலையில் 1200 பெண்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர், இதில்வர்த்தக சபை தலைவர் ஜி. டி. கோபாலகிருஷ்ணன், விவிடிஎன் பங்குதாரர்கள் விவேக் பன்சால்,புட்டின் அகர்வால் மற்றும் தொழிற்சாலை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.