திருச்சி, காந்தி மார்க்கெட் போலீஸ் எஸ்ஐ பிரியா மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கீரை கடை பஜார் பகுதியில் ஒரு வாலிபர் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தார் பின்னர் அவரை பிடித்து விசாரித்த போது கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . அதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர் . இவர் திருச்சி இ.பி ரோடு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த வாசு என்கிற ஜோசப் 19 என்பது தெரிய வந்தது. இதேபோன்று காமராஜர் நகர் பகுதியில் லாட்டரி விற்றுக் கொண்டிருந்த காமராஜர் நகர் வடக்கு தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த பொட்டுக்கடலை என்கிற ஏகாம்பரம் ( 65) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூபாய் 100 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் ஸ்ரீராம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம் ( 46 )இவர் கோணக்கரை அண்ணாமலை நகர் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அவரிடம் ஒரு வாலிபர் மது அருந்த பணம் கேட்டார் முருகானந்தம் கொடுக்க மறுத்தார் உடனே ஆத்திரமடைந்த அந்த வாலிபர் அவரை தாக்கி விட்டு தப்பிச் சென்றார். இது குறித்து முருகானந்தம் கொடுத்த புகாரின் பேரில் திருச்சி சுண்ணாம்பு காரன் பட்டி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த முருகன் (32 )என்பவரை கைது செய்தனர்.