திருச்சி மாநகராட்சி பகுதிகளில் சாலைகள் மற்றும் தெருக்களில் போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூறாக சுற்றி திரிந்த நாய்களை மாநகராட்சி பிடித்து கருத்தடை செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் 7929 ஆண் நாய்களுக்கும், 10,061 பெண் நாய்களுக்கும் என மொத்தம் 17,990 நாய்களுக்கும் கருத்தடை செய்யப்பட்டுள்ளது. இதே போல் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றி திரிந்த 36 கால்நடைகள் ஏலம் விடப்பட்டது. அதன் மூலம் 17 லட்சத்து 98 ஆயிரம் மாநகராட்சி வருமானம் ஈட்டி உள்ளது.