தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நவம்பர் மாதம் முதல் ஒவ்வொரு மாவட்டமாக சென்று கள ஆய்வு நடத்துகிறார். இந்த ஆய்வு பயணத்தை அவர் கோவையில் இருந்து தொடங்குகிறார். இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் உங்களில் ஒருவன் பகுதியில் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
உங்களில் ஒருவன் மாவட்டந்தோறும் நேரில் கள ஆய்வு!
திராவிட மாடல் அரசு தனது திட்டங்களை முழுமையாக நிறைவேற்றும் என்ற நம்பிக்கையுடன் உள்ள தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், நவம்பர் மாதம் முதல் மாவட்டந்தோறும் நேரில் கள ஆய்வு செய்யவிருக்கிறேன்.
அதில், நவம்பர் 5. 6 தேதிகளில் கோவைக்குச் சென்று கள ஆய்வினைத் தொடங்க இருக்கிறேன். மற்ற மாவட்டங்களிலும்
தொடரவிருக்கிறேன்.
கள ஆய்வும் தொடரும். திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களும் தொடரும்!
கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘உங்களில் ஒருவன்’
முதல்வரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து முதல்வரை வரவேற்று கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரான மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு மக்களின் நலன் காக்கும் திராவிட மாடல் நல்லாட்சியில், அரசு நிறைவேற்றி வரும் மகத்தான மக்கள் நல திட்டங்களின் நிலையறியும் கள ஆய்வை, நவம்பர் 5 , 6 தேதிகளில், கோவையிலிருந்து தொடங்கும், திராவிட நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை, கோவை மாவட்ட மக்களின் சார்பாக வணங்கி வரவேற்கின்றேன்.. வெல்லும் திராவிட மாடல்.. வளரும் தமிழ் திருநாடு..