Skip to content
Home » திருச்சியில் போலி பாஸ்போர்ட்டில் வௌிநாடு செல்ல முயன்ற 4பேர் கைது…

திருச்சியில் போலி பாஸ்போர்ட்டில் வௌிநாடு செல்ல முயன்ற 4பேர் கைது…

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, உக்கடை, தெற்கு தெருவை சேர்ந்தவர் பக்கிரி சாமி (54. ) இவர் கடந்த 22-ந் தேதி திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு தாய்லாந்து செல்வதற்காக வந்துள்ளார். அப்போது விமான நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டிருந்த குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் பக்கிரிசாமியின் பாஸ்போர்ட்டை சோதனை மேற்கொண்டனர். சோதனையில் அவர் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து பாஸ்போர்ட் பெற்றது தெரிய வந்தது. இதேபோல் சிவகங்கை தேவகோட்டையை சேர்ந்த, ஞானசேகரன் (53, ) பாண்டி (55) ஆகிய இருவர் கோலாலம்பூர் செல்வதற்காக திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்துள்ளனர். விமான நிலையத்தில் குடியேற்ற பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஞானசேகரன், பாண்டி ஆகிய இருவரும் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து பாஸ்போர்ட் பெற்றது தெரிய வந்தது. இதே போல் மதுரை மேலூர், செட்டியார் தெருவை சேர்ந்தவர் மகேஷ் (49 ) என்பவர் மலேசியா செல்வதற்காக திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்துள்ளார். விமான நிலையத்தில் குடியேற்ற பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் மகேஷ் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து பாஸ்போர்ட் பெற்றது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து குடியேற்ற பிரிவு அதிகாரிகள் பக்கிரி சாமி, ஞானசேகர், பாண்டி மற்றும் மகேஷ் ஆகியோரை ஏர்போர்ட் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். அவர்களை கைது செய்து ஏர்போர்ட் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!