கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பாபுசாப் பாளையாவில் உள்ள 6 அடுக்குகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. இந்த கட்டிடப்பணியில் வடமாநில தொழிலாளிகள் ஈடுபட்டு வந்தனர். இதற்காக அவர்கள் கட்டிடத்தின் அருகே தங்கியிருந்து வேலை பார்த்து வந்தனர். கடந்த சில நாட்களாக பெங்களூருவில் கனமழை பெய்து வந்ததால் தொழிலாளிகள் அனைவரும் கட்டிடத்தின் உள்ளே நின்று வேலை பார்த்து வந்தனர்.
கதொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்தபோது பெங்களூருவில் இரண்டு நாட்களாக பெய்து வந்த கனமழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் கட்டடம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களில் 20 பேர் மீட்கப்பட்டனர். அதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மணிகண்டன், சத்யராஜ் ஆகிய 2 பேரும் இறந்துள்ளனர் என தெரிய வந்துள்ளது. படுகாயமடைந்த 12 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என அச்சப்படும் நிலையில், மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது