போலியோ தினத்தை முன்னிட்டு, பாபநாசம் ரோட்டரி கிளப், வலங்கைமான் ரோட்டரி கிளப், ரிவர் சிட்டி ரோட்டரி கிளப், அய்யம் பேட்டை டெல்டா ரோட்டரி கிளப் இணைந்து பாபநாசத்தில் இன்று போலியோ விழிப்புணர்வு பேரணியை நடத்தின.
பாபநாசம் புதிய பேருந்து நிலையம் அருகில் தொடங்கியப் பேரணியை பாபநாசம் டி.எஸ்.பி முருகவேலு, பாபநாசம் தாசில்தார் செந்தில் குமார் தொடங்கி வைத்தனர். பாபநாசத்தின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றப் பேரணி பாபநாசம் அரசு மருத்துவமனை அருகில் நிறைவடைந்தது.
இதில் பங்கேற்ற ஆபிதீன் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பொது மக்களிடையே போலியோ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் ரோட்டரி உதவி ஆளுநர் அறிவழகன், பாபநாசம் ரோட்டரி கிளப் தலைவர் சக்திவேல், செயலர் ரவிச் சந்திரன், முன்னாள் தலைவர்கள் செந்தில் நாதன், விவேகானந்தம், சேவியர், பக்ருதீன், ரிவர் சிட்டி ரோட்டரி கிளப் தலைவர் கனிராஜ், அப்துல் ரசீது, மனோகரன், அய்யம்பேட்டை டெல்டா ரோட்டரி கிளப் தலைவர் ரவிச் சந்திரன், வலங்கைமான் ரோட்டரி கிளப் தலைவர் கோவிந்தராஜன், லயன்ஸ் கிளப் மாவட்டத் தலைவர் சாப்ஜான் உட்பட பலர் பங்கேற்றனர்.