Skip to content
Home » பட்டாம்பூச்சி பூங்காவில் நூற்றுக்கணக்கான பட்டாம்பூச்சிகள்…சுற்றுலா பயணிகள் வியப்பு

பட்டாம்பூச்சி பூங்காவில் நூற்றுக்கணக்கான பட்டாம்பூச்சிகள்…சுற்றுலா பயணிகள் வியப்பு

  • by Senthil

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஆழியார், வால்பாறை, கவி அருவி உள்ளிட்ட இடங்கள் தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்கள் ஆகும். இங்கு விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும், வெளி மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வருவது வழக்கம். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக வனத்துறையினர் பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். வனத்துறை கட்டுப்பாட்டில் ஆழியார் பகுதியில் அமைந்துள்ள ஆழியார் பட்டாம்பூச்சி பூங்கா சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்ததாகும். இதனை வனத்துறையினர்

முறையாக பராமரித்து வருவதால் சுற்றுலா பயணிகள் இதனை காண ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் உரிய பராமரிப்போடு செயல்பட்டு வரும் பட்டாம்பூச்சி பூங்காவில் பத்திருக்கும் மேற்பட்ட விதங்களில், நூற்றுக்கும் மேற்பட்ட வண்ணங்களில் பட்டாம்பூச்சிகள் சுற்றி திரிவது குழந்தைகள் மற்றும் பெரியவர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஆழியார் பட்டாம்பூச்சி பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் மனநிறைவோடு செல்வதாக மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!